பிரபு
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவமதிப்பு பேச்சு: அமித்ஷாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் அண்ணா சிலை அருகே சட்டமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில்“இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை,புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்தும். அவரை பதவி விலக வலியுறுத்தியும் ஒன்றிய பாஜக ஆளும் அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் தாராபுரம் நகரத் தலைவர் குறிஞ்சி செந்தில்குமார். செய்தி தொடர்பாளர் முருகானந்தம். முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து. அசோக் குமார் கபூர் ஹாக்கிங் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.