செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
குடவாசலில் நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்….
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேருந்து நிலையம் முன்பு நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதிவிலக கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் பால்கிட்டு, மாநிலத் துணைச் செயலாளர்கள் அந்தோணி, கோவி.கணேசன்,மாநில மகளிரணி துணைச் செயலாளர் அமுதாஇனியன், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஈசி கேவினர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையில் அம்பேத்கர் திருவுருவ பதாகைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.