கும்பகோணம் அருகே ஓங்கார ஆசிரமம் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு சாலை விருந்து
கும்பகோணம் அருகே சற்குரு சித்தர் சுவாமிகள்
சீனிவாசநல்லூரில் அவதரித்த அவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த 2004 ம் ஆண்டு இந்திய அரசு சித்தர் சுவாமிகளின் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டது. அவரின் நூற்றாண்டு விழாவில் சீனிவாசநல்லூரில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. இந்த நுழைவு
வாயிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தேதி அன்று சாலை விருந்து நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து இன்று நுழைவு வாயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. காலை முதல் சாலை விருந்து தொடங்கியது.
முன்னாள் எம்.பி.ராமலிங்கம் ஓங்கார ஆசிரம அதிபர் சுவாமி கோடீஸ்வராநந்தா மக்களுக்கு உணவு வழங்கி சாலை விருந்தை தொடங்கி வைத்தனர்.
இதனையடுத்து கிராம மக்கள், சுற்றபுற கிராம மக்கள், சாலை வருகின்றவர்கள், போகின்றவர்கள் என எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. விதவிதமான உணவு வகைகள் தயாராகி இரவு வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சாலை விருந்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.
முன்னதாக சீனிவாசநல்லூரில் உள்ள சற்குரு மண்டபம், சற்குரு அதிஷ்டானம், கருப்பசாமி கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை, அபிஷேக வழிபாடுகள் நடைபெற்றன.
ஓங்காரநந்தா சுவாமிகளின் வழிகாட்டுதல் படி மாபெரும் சாலை விருந்து சிறப்பாக நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை சாலை விருந்து குழு தலைவி உலகேஸ்வரி மற்றும் ஓங்கார ஆசிரம சீடர்களும், பக்தர்களும் செய்திருந்தனர்.