கம்பம் அருகே சுருளி பட்டியில் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாய கூலி பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கல் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிபட்டியில் செயல்பட்டு வரும் சிறந்ததொரு தொண்டு நிறுவனமான அன்பு அறம் செய் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் அதன் தலைவர் சுருளிப்பட்டி ரா.அன்பு ராஜா விவசாய விளை நிலங்களுக்கு சென்று அங்கு பணி புரியும் விவசாய கூலி தொழிலாளிகளை சந்தித்து நமது இந்திய திருநாடு விவசாய நாடு விவசாயத்தில் பல்வேறு உணவு தானியங்கள் உற்பத்தி செய்து நம் இந்திய திருநாட்டுக்கு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் விவசாய விளைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரே திரு நாடு இந்திய திருநாடு என்பதில் பெருமை கொள்வோம் ஆண்டுதோறும் டிசம்பர் 23ஆம் தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நாளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக விவசாய விளைநிலங்களில் வேலை செய்யும்கூலி பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நம் நாடு விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்பதையும் விவசாயம் என்பது நம் நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும் என்பதையும் விளக்கி கூறி விவசாய விளைநிலங்களில் பணியாற்றுவது சிறப்பு வாய்ந்த பணியாகும் என்பதை பணி புரியும் கூலித் தொழிலாளர்களுக்கு புரியுமாறு விளக்கி கூறினார் உடன் சுருளிப்பட்டி சங்கமம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்