மருத்துவக் கழிவு விவகாரம்; விளாசியது கேரளா ஐகோர்ட்
கேரளாவின் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது*. கழிவுகளை திருநெல்வேலியில் சட்டவிரோதமாக கொட்டியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.