திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் டி இ எல் சி தொடக்கப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிர்வாகி மறைதிரு ஜேக்கப் ஜெயராஜ் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர். இன்பராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் உதவி ஆசிரியைகள் ஜெசி பியூலா, ஜேனட், தனபாய் பொன் ராணி, செல்வி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், சத்துணவு அமைப்பாளர்கள், காலை, மதிய உணவு சமையலர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளி உதவியாசிரியர் கே. ரமேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.