முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.46 கோடி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

தென்காசி டிசம்பர் 23 –

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 3.46 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்லைவர் ஏ.கேகமல்கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீ குமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.

சிறந்த ஊராட்சிக்கான தேசிய விருது பெற்ற வரகனூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புலெட்சுமியை தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில்குருவிகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் விஜயலெட்சுமி கனகராஜ், துணைத்தலைவர் முருகேஸ்வரி கோட்டியப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் தேவி ராஜகோபால், சுதா பிரபாகரன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஏழிசைச்செல்வி, குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ரவிச்சந்திரன்.அருள்செல்வன் தெற்கு குருவிகுளம் ஊராட்சிமன்றத் தலைவர் குணசுந்தரி, குருவிகுளம் வட்டார வளர்ச்சி பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர.ஜோசப் ரெஜினால்டு பெரிஸ், உதவிப் பொறியாளர்கள் ரமேஷ்,முத்துச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *