திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயம் அருகில் இருந்து, வலங்கைமான் மேற்கு, கிழக்கு ஒன்றிய,நகர அஇஅதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 37- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமாகிய குமாரமங்கலம் கே. சங்கர் தலைமையில், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாத்தனூர் யூ.இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மௌன ஊர்வலம் புறப்பட்டு கும்பகோணம் ரோடு, காளியம்மன் கோவில், கடைத்தெரு வழியாக ராமர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையை வந்தடைந்தது.
தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ஜெய. இளங்கோவன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளரும், வலங்கைமான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மாஸ்டர் எஸ். ஜெயபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி, ஆர். ஜி. பாலா, தொழுவூர் முனுசாமி, நகர அவை தலைவர் ரத்தினகுமார், மாத்தூர் குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விடையல் சங்கர், குவளை பால தண்டபாணி,ஓட்டுநர் சிவசங்கரன் உள்பட உள்ளாட்சி நிர்வாகிகள், கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.