புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 19.12.2024 முதல் 25.12.2024 வரையில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாட்சி வாரமாக (Good Governance Week) கொண்டாடப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக, 25-12-2024 அன்று காளிகுப்பம், மீன்வளப் பயிற்சி நிலையத்தில், மண்டபத்தூர், காளிகுப்பம் மற்றும் அக்கம்பேட்டை மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அதில் 38 நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். வரிச்சிக்குடி, அரசு மருத்துவமனை, சித்த மருத்துவ பிரிவு, சித்த மருத்துவர் S. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்தளித்தார் இதற்கான ஏற்பாட்டை முனைவர் P. கோவிந்தசாமி அவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.