தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி இராமச்சந்திரன் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் க.இலட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பெ. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர் G.நேரு (எ) குப்புசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.