மதுரையில் வெளிநாடு செல்லும் தொழிலாளர்
களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – பயிற்சி வகுப்பு
காந்திமகன் அறக்கட்டளை நிறுவனர் ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது
வெளிநாடு வேலைக்கு செல்வோர் அரசு அனுமதி பெற்ற ஏஜென்சி மூலம் வேலை பெற நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் வெளி நாடு செல்லும் தொழிலாளர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனமான காந்தி மகன் அறக்கட்டளை சார்பில் வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்பு மதுரையில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு காந்திமகன் அறக்கட்டளை நிறுவனர் ஏ.வெங்கடேசன் தலைமை தாங்கி பேசுகையில் வெளி நாட்டுக்கு செல்லும் தொழிலாளர்கள் அரசு அனுமதி பெற்ற ஏஜென்சி மூலம் வேலை வாய்ப்பை பெற்று செல்ல வேண்டும்.இதனால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் .
மேலும் வெளி நாட்டில் வேலை பார்க்கும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொழிலாளர்கள் நமது இந்திய அரசு தூதரக அலுவலகங்கைள தொடர்பு கொண்டு பிர்ச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். வெளிநாட்டுக்கு செல்வோர் தங்களது பாஸ்போர்ட் வேலைக்கு செல்லும் நாட்டின் விசா பிரதி மற்றும் இதர ஆவணங்களை உரிய முறையில் எடுத்துச் செல்ல வேண்டும்.. மேற் குறிப்பிட்ட இந்த ஆவணங்களின் நகல்களை வீட்டில் கொடுத்து வைப்பதும் நல்லது என கூறினார்.
நிகழ்ச்சியில் காந்தி மகன் அறக்கட்டளை செயலாளர் லட்சுமி நாராயணன் வரவேற்று பேசினார்.
அறக்கட்டளையின் தலைவர் வில்வ நாதன் துணை தலைவர் பாஸ்கரன் துணைச் செயலாளர் கள் மரிய ஜோசப் பிரான்சிஸ் பிர்தௌஸ்கான்; முன்னிலை வகித்தார்.
ஏ.டி திறன் மேம்பாடு செந்தில் குமார் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பின்னர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.ஆர்.ஜி. மோகன் ( நீதிபதி ஓய்வு) தல்லாகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ஜான் பிரிட்டோ மதுரை மாநகர் எஸ்.பி.சி. ஐ.டி ஏ. தர்மலிங்கம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் அறக்கட்டளையின் நாட்காட்டி வெளியிடப் பட்டது. இதனை சி.டி. ஓ.டி தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் குமார் வெளியிட மதுரை மாநகராட்சியின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் தேவதாஸ் பெற்றார்.
பதிருமுருகன் வழங்கினார். போக்குவரத்துக் கழக முருகேசனுக்கு அவரது பொதுச் சேவையை பாராட்டி விருது வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப் பட்டது. சுப்பிரமணி நன்றி கூறினார் செல்ல பாண்டியன் மகேந்திரன்,
சண்முகம், கணேசன் தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பை பயிற்றுநர் வெங்கடேசன் நடத்தினார்.