சத்தியமங்கலத்தில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மத நல்லிணக்க சமத்துவ கிறிஸ்மஸ் விழா
சத்தியமங்கலம் புதிய மார்க்கெட் எதிரில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் மத நல்லிணக்க சமத்துவ கிறிஸ்மஸ் நிகழ்ச்சி பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில் நடைபெற்றது இவ்விழாவில் அருட்தந்தை ரோசாரி யோக்கு பொன்னாடை அணிவித்தும் சிறப்பு பிரார்த்தனைகளோடு கூடியிருந்த கிறிஸ்தவ மக்களுக்கு இனிப்புகள் மலர்கள் வழங்கியும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்
மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல் சமய நல்லுறவு இயக்க ஈரோடு மாவட்ட நகர நிர்வாகிகள் கவிமணி, ஜமேஷ் ஆசிப்,சேவியர், வழக்கறிஞர் சக்திவேல் தேவ் ஆனந்த்,சுரேஷ் பிரபுதாஸ் முகமது ஃபாருக், யூசுப்பாய், கெஜலட்டி தர்கா கமிட்டி ரஃபீக்.செந்தில்.உள்ளிட்டோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்