கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
வலங்கைமான் அருகே சாலபோகத்தில் சிபிஐ எம்எல் கட்சியின் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்று விழா….
சிபிஐ எம்எல் மாநில செயலாளர் ஆசைத்தம்பி பங்கேற்பு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சாலபோகத்தில்
சிபிஐ எம்எல் கட்சியின் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மாவட்ட குழு உறுப்பினர் முருகானந்தம், சாலபோகம் கிளை செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிபிஐ எம்எல் கட்சியின் மாநில செயலாளர் ஆசைத்தம்பி , மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் குணசேகரன்,மாநில செயற்குழு உறுப்பினர் மாசிலாமணி ஆகியோர் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் கன்னையன், நடராஜன் செல்லதுரை, பிரபு , விஜயகுமார் ராமன் மற்றும் சாலபோகம் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,
சிபிஐஎம்எல் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.