இரா.பாலசுந்தரம்-செய்தியாளர் திருவாரூர்
திருவாரூர் கீழவீதிசக்கர விநாயகர் கோவிலில் கன்னி பூஜை விழா
திருவாரூர் கீழவீதி சக்கர விநாயகர் கோவிலில் உள்ள கலியுக வரத ஐயப்பனுக்கு 42-ஆம் ஆண்டு கன்னி பூஜை விழா நடைபெற்றது. இதில் ஆலய அர்ச்சகர் குருசாமி சக்கரை செல்வம் தலைமையில் சரண கோஷங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் ஆன்மீகப் பெருமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.