இரா.பாலசுந்தரம்,செய்தியாளர்-திருவாரூர்.
திருவாரூர்: சாலையில் சுற்றி திரிந்த மாடுகளால் விபத்து.
திருவாரூர்-நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில், வாளவாய்க்கால் அருகேசாலையில் திரிந்த மாடுகள் சண்டையிட்டு சாலையின் குறுக்கே வந்ததில், டூவீலரில் வந்த இருவர் மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்கினர்.
இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவர் காயங்களுடன் உயிர் தப்பினர். இந்நிலையில் சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது