கும்பகோணம் செய்தியாளர்
ஆர் .தீனதயாளன்
கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவும் மற்றும் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழா சிபிஐ மாவட்ட செயலாளர் மு .அ.பாரதி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிபிஐ மாவட்ட செயலாளர் பாரதி, கும்பகோணம் துணை மேயர் தமிழரசன் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து தாராசுரம் மார்க்கெட் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு உணவு விடுப்புகள் வழங்கி, சிபிஐ மின்சாரவாரியத்துறை அலுவலகத்தில் கொடியேற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரண்யா பாலன், சிபிஐ அனைத்து கிளை நிர்வாகிகள் நாராயணன் ரவி ,மணி, காமராஜ் , சரவணன், ஜல்லி சீனிவாசன், சிபிஐ மின்சார வாரிய தலைவர் முருகையன், துணைத் தலைவர் கோபாலன் மற்றும் சிபிஐ கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களள் என பலர் கலந்து கொண்டனர்.