C K RAJAN
Cuddalore District Reporter..
9488471235..
பண்ருட்டி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பல்வேறு இடங்களில் களஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வாழப்பட்டு, ஆண்டிப்பாளையம், சின்னப்பேட்டை, எனதிரிமங்கலம், வீரப்பெருமாநல்லூர், மேலிருப்பு. காமாட்சிப்பேட்டை, கரும்பூர், பண்ருட்டி வேளாண் விற்பனை மையம், காடாம்புலியூர் சமத்துவபுரம், அங்கன்வாடி மையம், சிறு விளையாட்டு அரங்கம், சார்பதிவாளர் அலுவலகம், பொது இ-சேவை மையம், நெல்லிக்குப்பம் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், குடிதாங்கி முதியோர் பாதுகாப்பு மையம், தொரப்பாடி பேரூராட்சி அலுவலகம், காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று களஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் சாலை போக்குவரத்தில் அதிக விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட வாழப்பட்டு, ஆண்டிப்பாளையம் பகுதிகளில் எச்சரிக்கை மற்றும் அறிவுப்பு பலகைகள் கூடுதலாக ஏற்படுத்திடவும். வேக கட்டுப்பாட்டினை ஏற்படுத்திட தடுப்புகள் அமைத்திடவும், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் அமைத்திடவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்