புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுற்றுலாத்துறை, விவசாயிகள் நலத்துறை, கலைப் பண்பாட்டு துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து கடந்த ஆண்டுகளைப் போல 2025-ஆம் ஆண்டும் காரைக்கால் கார்னிவல் – 2025 சிறப்பாக நடத்துவது தொடர்பாக காரைக்கால் மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P.R.N. திருமுருகன் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியர் முனைவர் து. மணிகண்டன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் Ms. லட்சுமி சௌஜன்ய ஆகியோர்களின் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரியில் இருந்து கலை பண்பாட்டு துறை இயக்குனர் V. கலியபெருமாள், மற்றும் சுற்றுலாத்துறை இயக்குனர் K. முரளிதரன் அவர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

மேலும், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் (வருவாய்) அர்ஜுன் ராமகிருஷ்ணன், துணை மாவட்ட ஆட்சியர் (நிர்வாகம்) செந்தில்நாதன், துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) திரு. வெங்கடகிருஷ்ணன், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் திரு சுபாஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் திரு. K. சந்திரசேகரன், மற்றும் காவல் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நல்வழித்துறை மற்றும் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும், காரைக்கால் கார்னிவல் 2025 விழாவை அடுத்த மாதம் ஜனவரி மாதத்தில் நடத்துவது என்றும், மிக பிரம்மாண்டமாகவும் மக்களுக்கு மிகவும் பிடித்தமாகவும் இருக்க வேண்டும் என்றும், பல்வேறு அரசுத்துறை தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும், விழாவில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குறித்தும், கலை நிகழ்ச்சிகள், விவசாயக் கண்காட்சி, மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது என்னவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருப்பதுடன், முன்னேற்பாடு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு விழாவினை மிக சிறப்பாக நடத்துவது என்றும், மேலும் பல்வேறு விழா தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி விரிவான ஆலோசனைகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *