புதுச்சேரி காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அம்பாள் சத்திரம் காமராஜர் வளாகத்தில் முதியோர் உதவித்தொகை புதிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பத்தாயிரம் புதிய பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை அனுமதி அளிக்கப்பட்டு,அதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு,தொகுதிக்கு 300 நபர்கள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு புதுச்சேரி சமூக நலத்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை அட்டைகளை வழங்கி துவக்கி வைத்தார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேம்பாட்டு கழகம் மூலம் பணிகொடைக்கான காசோலை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பி.ஆர்.என்.திருமுருகன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.நாஜிம்,திரு நாக தியாகராஜன்,ஜி.என்.எஸ் ராஜசேகரன்,காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ்.பி.எஸ்,ரவி பிரகாஷ் ஐ ஏ.எஸ்,சார்பு ஆட்சியர் செல்வி எம்.பூஜா ஐஏஎஸ்,துறை இயக்குனர் முத்துமீனா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் திருமதி சாந்தி,காரைக்கால் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காரைக்கால் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி திருமதி கிருஷ்ணவேணி ஏற்பாடு செய்திருந்தார்.