புதுச்சேரி காரைக்கால் கலைஞர் மு. கருணாநிதி அரசு முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமூகப்பணி துறை மற்றும் அதானி அறக்கட்டளை இணைந்து “பெண்களுக்கான நிலையான வாழ்வாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி”யை நிரவி முகையத்தீன் ஆண்டவர் பலிவாசலில் நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் துவக்க உரையாக நிரவி பஞ்சாயத்து சார்பில் ஹாஜி மன்சூர் ஷா அவர்கள் உரையாற்றினார் அதானி அறக்கட்டளையின் CSR திட்ட அலுவலர் ஆனந்தி வரவேற்புரையாற்றினார்.
அதானி அறக்கட்டளையின் CSR திட்ட மேலாளர் சாருமதி அவர்கள் அதானி அறக்கட்டளையின் பணிகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பற்றிய மேலோட்டமான விளக்கத்தை வழங்கினார்.
சமூகப்பணி துறை உதவி பேராசிரியர் டாக்டர் வி. லட்சுமணபதி “சூழலுக்கேற்ற மற்றும் வீட்டிலிருந்து செய்யக்கூடிய வாழ்வாதார செயல்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் பெண்கள் எப்படி மற்றவர்களை சார்ந்து இல்லாமல் த ங்கள் சொந்த திறமையால் சிறு தொழில் செய்யும் வகையில் வளர்ச்சி பெற வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின் நன்றி உரையை சமூகப்பணி துறை இரண்டாம் ஆண்டு மாணவர் திரு. ஜெ. சுனில் வழங்கினார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்தனர். மேலும், பெண்கள் சுயஉதவி குழுக்கள் ஆரம்பிக்கவும் சில ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
களப்பணி மாணவர், பேராசிரியர், அதானி CSR குழுவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.