காஞ்சிபுரம் மாநகராட்சி 42வது வார்டு பகுதி செவிலிமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் CSR நிதியின் கீழ் ரூ.30.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
மேலும்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 33வது வார்டு விளக்கடி கோயில் தெருவில் MLACDS நிதியின் கீழ் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தையும், மேலும் MLACDS நிதியின் கீழ் ரூ.18.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிடத்தையும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து
காஞ்சிபுரம் மாநகராட்சி 28வது வார்டு அண்ணா நகர், மிலிட்டரி ரோடு MLACDS நிதியின் கீழ் ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய நியாய விலைக் கடை கட்டிட பணியினை அடிக்கல் நாட்டி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் துவக்கி வைத்து கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க வருகை புரிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசனுக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்து சால்வை அணிவித்து தங்கள் பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக நன்றிகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில்
மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், திமுக மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், மண்டல குழு தலைவர்கள் சந்துரு, சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன், சசிகலா, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், மாநகராட்சி பொறியாளர் கணேசன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ் பி கே சீனிவாசன், திமுக பகுதி கழக செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், தசரதன்,மாமன்ற உறுப்பினர்கள் கமலக்கண்ணன், சுரேஷ், ஷோபனா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.