தே.பண்டரிநாதன்(எ)
அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பட்டானூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் புதிய நிர்வாகியை அறிவித்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பட்டானுர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் டாக்டர் ராமதாஸ் தலைமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசும்போது கட்சிக்கு நல்ல நிர்வாகிகள் தேவை கட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கெல்லாம் புதிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.
அன்புமணி ராமதாஸ் பேசி முடித்தவுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரின் பெயரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவே கோபமடைந்த டாக்டர் அன்புமணி கையில் இருந்து மைக்கை மேஜை மீது தூக்கி எறிந்தார் இதனால் விழா மேடைகள் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
உடனே கோபமடைந்து அன்புமணி ராமதாஸ் தன்னுடைய மொபைல் நம்பரை தொண்டர்களிடம் வழங்கி எதுவாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதால் விழா மேடை சிறிது நேரம் பரபரப்பு சலசலப்பு நிலவியது.