சோழவரம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி ; கவுன்சிலர் நாகவேல், தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன், பந்தையடித்து துவக்கி வைப்பு.
சோழவரம் ஊராட்சியில் நண்பர் கள் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான இரண்டாம் ஆண்டு கைப்பந்து போட்டி நடைப் பெற்றது.இப் போட்டியினை ஒன் றிய கவுன்சிலர் நாகவேல், சோழ வரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிமுனிகிருஷ்ணன், ஆகி யோர் பந்தை அடித்து துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது சோழவரம் ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சோழவரம் நண்பர்கள் சார்பில் இரண்டாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப் போட்டியினை சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் 9-வது வார்டு கவுன்சிலர் தேவநேரி நாகவேல், சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனிகிரு ஷ்ணன் ஆகியோர் பந்தையடித்து போட்டியினை தொடங்கி வைத்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழு துணை பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான மீ வே கருணா கரன் கலந்து கொண்டார்.
இப் போட்டியில் திருவள்ளூர் மாவ ட்டத்தைச் சேர்ந்த 32 அணியினர் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ15 ஆயி ரம் ரொக்க பணம் மற்றும் கோப் பை இரண்டாவது பரிசாக 10,ஆயி ரம் மற்றும் கோப்பை மூன்றாவது பரிசாக 6ஆயிரம் மற்றும் கோப் பை நான்காவது பரிசாக 4ஆயிரம் மற்றும் கோப்பை என வழங்கப்படு கிறது. இந்நிகழ்வில் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அபிஷா ஜெகன் மற்றும் சோழ வர ம் நண்பர்கள் விளையாட்டு குழுவி னர் எனபலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோழவரம் நண்பர்கள் குழு சார்பில் செய்யப்பட்டிருந்தது.