வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் (27/12/24 ) நேற்று முன்தினம் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு நாள்,வைக்கம் வெற்றி முழக்கம்,திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமை தாங்க,மாநில ப க அமைப்பாளர் அ.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் முசிறி ரத்தினம்,மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த தெருமுனை கூட்டத்தில் தலைமைக்கழக சொற்பொழிவாளர் புரட்சி பேச்சாளர் செல்வி தே. நர்மதா கலந்து கொண்டு பெரியார் மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு தனது அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் கவர்ந்ததுடன் மிக அருமையாக பேசினார்.இதில் மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்து திருச்சி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன்,துறையூர் ஒன்றிய பெருந்தலைவர் சரண்யா மோகன் தாஸ்,துறையூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் இள.அண்ணாதுரை, வீரபத்திரன்,சிவ சரவணன்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், தமிழ் புலிகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இராஜா, முசிறி ஒன்றிய செயலாளர் பாண்டியன், இ. கம்யூனிஸ்ட் பொறுப்பாளர் செல்வம்,விசிக. குமார்,மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி மற்றும்
திராவிடர் கழகம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் த.ரஞ்சித் குமார்,மாவட்ட ப. க. துணைத் செயலாளர் எஸ். என். புதூர் கருணாகரன், உப்பிலியபுரம் ஒன்றிய ப. க. தலைவர் மாராடி எம். ஏ. ரமேஷ், மாராடி சி. செல்வராஜ் கோர்ட் பெ. பாலகிருஷ்ணன், துறையூர் மாவட்ட ப. க. தலைவர் பெ. பாஸ்கர்,மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. செந்தில் குமார், துறையூர் ஒன்றிய தி. க. தலைவர் இர.வரதராஜ், மாவட்ட ப. க. செயலாளர் பி.பிரபு, மாவட்ட ப. க. துணை தலைவர் த.கலைப்பிரியன்,மாவட்ட துணை செயலாளர் சு. சரண் ராஜ்,மாவட்ட மாணவரணி தலைவர் ரெ. தன்ராஜ்,மாவட்ட இளைஞரணி லோகநாதன், நகர திராவிடர் கழகத் தலைவர் க. ராஜா,மாணவரணி ம.இனியன்சம்பத், இளைஞரணி சபரி மற்றும் ஆசிரியர் து. சுரேஷ் குமார், ப. க. தமிழ்ச்செல்வன் ஏராளமான பொதுமக்கள்,பழ வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்