கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி சிபிஐ எம்எல் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா கணபதியக்ரஹாரத்தில் உள்ள ஆடுதுறை கலைஞர் நகர் கிராமத்தில் சாலை வசதி, சமுதாயக்கூடம் பழுதான தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரியும் , ரேஷன் கடை பகுதி நேரமாக மாற்றி கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி பி ஐ எம் எல் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்லதுரை தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்டச் செயலாளர் கண்ணையன், மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி, மாவட்ட குழு உறுப்பினர் பிரபு, மற்றும் நிர்வாகிகள் , பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையில் குழந்தைகளுடன் கொடியைப் பிடித்தவாறு சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்படிக்கையானதால் சாலை மறியல் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.
