இராஜபாளையம்
19 வது ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!
இராஜபாளையம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1985- ம்
ஆண்டு 10- வது வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும் இணைந்து பழைய மாணவர்கள் சங்கம்-85 என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து சந்திப்பு விழா நடத்தி வருகின்றனர், அப்பள்ளியில் பயின்று வரும் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தாடைகளும், நோட்டு புத்தகங்களும் தொடர்ந்து 18 ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக
19 வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் 30 முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து நிகழ்வில் பங்கேற்றனர்.
அம்மாணவ நண்பர்களில் சமூக சேவையாற்றி வரும் பகிர்வு அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர் செல்வகுமார், கவிஞராக திகழ்ந்துவரும் வக்கீல் கண்ணன், இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி துணை முதல்வராக பணியில் இருக்கும் முனைவர் கனகசபாபதி மற்றும் அப்பள்ளியிலே ஆசிரியராக பணிபுரிந்து சாரணர் இயக்கம், ஜேசியை, ரோட்டரி கிளப் மூலம் தொடர்ந்து நற்செயல் புரிந்து வரும் ஆசிரியர் மாரியப்பன் ஆகியோர்கள் சிறப்பிக்கப்பட்டனர். 10- ம் வகுப்பில் பள்ளி நண்பர்களாக இணைந்ததின் 40-வது ஆண்டையும், அமைப்பின் 20வது ஆண்டு விழாவையும் அடுத்த ஆண்டு சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.