விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ” ராஜபாளையம் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பூக்கும் பருவத்தில் சில பகுதிகளில் குலை நோய் தாக்குதல் தென்படுகிறது. இந்த நோய் தாக்கம் முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக பனிப்பொழிவு பயிரின் அனைத்து பகுதிகளிலும் இலைகள் ,தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர் பூசனத்தால் தாக்கப்பட்டிருப்பது
இந்த நோய் தாக்குதலை கண்டுபிடிக்கலாம் அது மட்டுமல்லாமல் இலைகளின் மேல் வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மையப்பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுகளை உருவாக்கும் .தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். குலை நோய் தாக்குதல் அறிகுறி ஆகும். இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5% கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணிக்கு 5 கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாள் கழித்து நோயின் தீவிரத்தை பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டர் புளித்து தயிரை கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரிக்கும். இந்த நோய் தாக்குதல் தீவிரமாக இருந்தால் டிரைசைக்ளோசோல் 200 கிராம் அல்லது கார்பன் பிடசிம் 200 கிராம் அல்லது ஐசோபுரத்தியோலேன் 300 மி.லி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்- இவ்வாறு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.