கூடலூர் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் அதன் தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையிலும் ஆணையாளர் கோபிநாத் பொறியாளர் பன்னீர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது கூட்டம் தொடங்கியதும் நாளை புதன்கிழமை 2025 ஆண்டு வருடப்பிறப்பை முன்னிட்டு அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு கூட்டம் துவங்கியது

நகர மன்ற அஜெண்டாவில் நகராட்சி ஆணையாளர் அவர்களின் அக்டோபர் 2024 மற்றும் நவம்பர் 2024 ஆகிய மாதத்திற்கான நாட்குறிப்பு மன்றத்தின் பார்வைக்கும் பொறியாளர் அவர்களின் அக்டோபர் 2024 நவம்பர் 2024 நாட்க் குறிப்பு மன்றத்தின் பார்வைக்கும் கூடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள தெருநாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு தேவையான ஏபிசி மையம் அமைத்திடுமாறு தேனி மாவட்ட கலெக்டர் கடந்த 2. 12 2024 ஆம் தேதிய ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது

இதன் அடிப்படையில் நகராட்சி பொதுமயானத்தில் ஏற்கனவே உள்ள நுண் செயலாக்க மையத்தின் ஒரு பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான ஏபிசி மையம் அமைத்திட 4.50 லட்சத்திற்கு தயார் செய்யப்பட்ட மதிப்பீட்டிற்கு மன்ற அனுமதி வழங்கப்பட்டது நகராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் வார்டு எண் 1 முதல் 21 வார்டுகள் வரை தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

மேற்படி குடிநீரின் தன்மையை கண்டறிய மாதந்தோறும் ஏதேனும் இரண்டு மேல் நிலை மற்றும் தரைதள தொட்டிகளில் இருந்து நீர் மாதிரிகள் சேகாரம் செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தேனி அவளிடம் பரிசோதனை அறிக்கை பெறவும் மற்றும் ஒரு வருட காலத்திற்கு உண்டாகும் செலவினம் ரூபாய் போது 30 ஆயிரம் மட்டும், மன்றத்தின் அனுமதி வழங்கப்பட்டது உள்பட 27 தீர்மானங்கள் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகராட்சி மேலாளர் வெங்கடேஷ் சுகாதார அலுவலர் விவேக் அறிவழகன் உள்பட நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் 21 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட அனைவரும் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர் இளநிலை உதவியாளர் லோகு நன்றி கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *