அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் கல்லூரி மாணவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹோட்டல் உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் , பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தியுள்ளதாக தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது இந்நிலையில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கோரி , கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாணவர் அமைப்பினர் , மாதர் சங்கத்தினர் , உள்ளிட்ட பல்வேறு பல்வேறு அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் பல்கலை கழக மாணவிக்கு நீதி கேட்டும் மேல்நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக ஆளுநரை கண்டித்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் பெருமன்ற மாவட்டத்தலைவர் கேஆர்ஜே. பாரதச்செல்வன் மாவட்டச் செயலாளர் ஜே. பி. வீரபாண்டியன் மாவட்ட பொருளாளர் க. கோபி, மாவட்டகுழு உறுப்பினர் எம். சந்துரு மாவட்டகுழு உறுப்பினர் ஆர். தர்சன்,பவித்ரன் ஆர்.சரவணன் எம். அசின் ,திவ்யா, பிரியங்கா உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுனர்…