விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் போட்டோ & வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மொகமத் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக விருத்தகிரீஸ்வரர் கோவில் வரை போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதில் புகைப்பட கலைஞர் சங்கத்தின் தலைவர் பூபதி தலைமையில், செயலாளர் செந்தில்நாதன், சந்திரசேகரன். ரங்கப்பிள்ளை. முன்னிலையில் நடைபெற்ற இப்பேரணியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மொகமத்.அவர்கள் பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வருவாய் வட்டாட்சியர் உதயகுமார் உடன் இருந்தனர்.