ராஜபாளையம் எ.கா.த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் இளைஞர் செஞ்சுலுவைச் சங்கம்நிகழ்ச்சி மூன்று பகுதிகளாக நடைபெற்றது.
முதற் பகுதியின் சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செகரட்டரி பாலமுருகன் கலந்துகொண்டு செஞ்சுலுவைச் சங்கத்தின் பணிகள் மற்றும் நன்மைகள் குறித்து பேசினார்.இரண்டாவது பகுதியில் பையர் ரெஸ்க்யூ சர்வீஸ் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு நெருப்பின் தடுப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கூறினார்,
.மூன்றாவது பகுதியில் வனவிலங்கு சங்கம் சியாம் கலந்துகொண்டு பாம்புகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசினார்.மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியபாக்கியம் மற்றும் உதவி ஆய்வாளர் கிறிஸ்டி சைபர் கிரைம் மற்றும் சைபர் செக்யூரிட்டி பற்றி பேசினார்
.ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார்.கல்லூரி முதல்வர் ஜமுனா அறிமுக உரையாற்றினார்.கல்வி ஆலோசகர் சங்கரநாராயணன் தலைமை உரையாற்றினார்.மாணவி ஜீவிதா புஷ்பம் நன்றியுரை கூறினார் .