திருவாரூர் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் 27 டிசம்பர் அன்று துவங்கி 31 டிசம்பர் 2024 நிறைவு.

தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆண்கள் கோகோ போட்டிகள் நிறைவு விழா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு கிருஷ்ணன் தலைமையில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் டி.மணிகண்டன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் துணைவேந்தர் மு. கிருஷ்ணன் பேசுகையில், “தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான கோகோ போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை பேராசிரியர்களை நான் வாழ்த்துகிறேன் கல்வி மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சியும் நம் பிரதான சிந்தனையாக இருக்க வேண்டும் அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். யோகா பயிற்சி உடல் மற்றும் மனதுக்கு ஆரோக்கியமானது, அதை தினமும் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார்
மொத்தம் ஐந்து நாள் நடைபெற்ற போட்டிகளில் 72 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1044 விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளுக்காக பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட 4 கோகோ மைதானங்கள் மற்றும் 2 உள் விளையாட்டு அரங்கங்களில் போட்டிகள் நடைபெற்றன
மதிப்பெண்கள் அடிப்படையில் கர்நாடகாவைச் சேர்ந்த மங்களூர் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றது தொடர்ந்து இரண்டாவது இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த தேவனகீரை பல்கலைக்கழகம், மூன்றாம் இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதியார் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தில் கேரளா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டன வெற்றி பெற்ற நான்கு அணிகளும் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய கோகோ போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன
ஐந்து நாள் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான கோகோ போட்டிகளை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை தலைவர் எஸ் ஜெயராமன் தலைமையில் உதவிப் பேராசிரியர்கள் நாகராஜா விஷ்ணுவர்தன் ரெட்டி, பிந்து மாதவன் மற்றும் அகிலா ஒருங்கிணைத்து நடத்தினர்