தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
சண்டிகர் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பணியிலிருந்து வெளிநடப்பு செய்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மற்றும் சண்டிகர் மின்துறையை தனியார் மயப்படுத்த உள்ள நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சண்டிகர் மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் சங்க தலைவர் தணிகாசலம் தலைமையில் உப்பளம் மின்துறை தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பணியில் இருந்து வெளிநடப்பு செய்த ஊழியர்கள் புதுச்சேரி மற்றும் சண்டிகர் மின்துறை தனியார் மையமாக்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.