தி. உதயசூரியன். வாடிப்பட்டி செய்தியாளர்
செ: 8098791598
அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர் ஊராட்சி கெங்கமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று முடிந்ததையொட்டி நேற்று 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் பல்வேறு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹிதி தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் பரிவார தெய்வங்கள் மீது ஊற்றப்பட்டு 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
பின்னர் திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கெங்கமுத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.