ஏ பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா நெடுந்துர ஓட்டப் போட்டி இரு பாலருக்கும் வரும் 05. அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ். தகவல்
பெரம்பலூர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 2025-ஆம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா நெடுந்துர ஓட்டப் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலருக்கும் 02 பிரிவுகளில் 05.01.2025 அன்று காலை 06.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடத்தப்படவுள்ளது. 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு – 8 கி.மீ, பெண்களுக்கு – 5 கி.மீட்டரும், 25 வயதிற்குமேற்பட்ட ஆண்களுக்கு – 10 கி.மீ, பெண்களுக்கு – 5 கி.மீட்டர் தூரமும் நடத்தப்படவுள்ளது.
முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5000/-மும், இரண்டாம் பரிசு தொகையாக ரூ. 3000/- மும், மூன்றாம் பரிசு தொகையாக ரூ.2000/-ம் வீதம் 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/- ம் வீதமும், பரிசுத் தொகையுடன் தகுதிச்சான்றும் வழங்கப்பட உள்ளது.
இப்போட்டிகளில் பங்குகொள்ள விரும்புபவர்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதார் அட்டை, மருத்துவ தகுதிசான்றிதழ் மற்றும் வயது சான்றிதழை 03.01.2025 அன்று மாலை 4.00மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஓடுவதற்கு ஏதுவான காலணி (Shoe) அணிந்திருக்க வேண்டும். போட்டி துவங்கும் முன் தங்களுடைய பதிவு எண்ணை (Chest Number) போட்டி நடக்கும் இடத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையினை (School/College ID Card& Bonafide) காண்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். போட்டியின் முடிவு நடுவர் தீர்ப்பிற்குட்பட்டது. போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தினை தெளிவாக கணக்கு எண் தெரியும்படி கொண்டு வரவேண்டும்.
இப்போட்டியானது 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவுவாயில் முன் துவங்கி பாலக்கரை ரவுண்டானாவைச் சுற்றி வந்து மீண்டும் திருச்சி நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் வரை இரண்டு சுற்றுகளும், பெண்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவுவாயில் முன் துவங்கி பாலக்கரை ரவுண்டானாவைச் சுற்றி வந்து மீண்டும் திருச்சி நெடுஞ்சாலை வரை சென்று திரும்பி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவு வாயில் வரையும் நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.