திண்டிவனம் சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட ஆட்சி தலைவருக்கு முஸ்லிம் மக்கள் கழகம் கோரிக்கை

திண்டிவனம் ஜனவரி 2 முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு.ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவத விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருமுக்கிய நகரமாக விளங்கி வருகிறது. விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு மிக முக்கியமான இணைப்பு நகரமாக திண்டிவனம் இருந்து வருகிறது

அது மட்டும் இல்லாமல் பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் திருவண்ணாமலை, மேல்மலையனூர் செல்லும் பெரும்பாலான பயணிகளுக்கு திண்டிவனம் வந்து தான் செல்ல வேண்டும் அதுபோன்ற ஒரு சிறப்பு வாய்ந்த திண்டிவனம். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே ஒரு முக்கிய நகரமாக விளங்கி வருகிறது இத்தகைய சிறப்பு வாய்ந்த திண்டிவனத்தில் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளது.ஆனால் சாலைகள் படுமோசமாகவும். குண்டும் .குழியுமாகவும். உள்ளது

டாக்டர் சேகர் அவர்களின் மருத்துவமனைக்கு அருகிலே படு மோசமான சாலையாக உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றார்கள் இது மட்டும் இல்லாமல் தேவாங்கர்சாலை.மசூதி சாலை. ஈஸ்வரன் கோவில் சாலை. நகராட்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலை. மயிலம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு அருகே உள்ள சாலை மீன் மார்க்கெட் செல்லும் சாலைகள் எல்லாம் படுமோசமாகவும் குண்டும் .குழியுமாக. இருந்து வருகிறது

இதனால். வாகன ஓட்டிகளுக்கு பெருத்த மன உளைச்சல் ஏற்படுத்து வகையிலும் விபத்துக்கு உள்ளாக கூடிய ஒரு நிலையை இந்த சாலைகள் உருவாக்குவதற்கு காரணமாக இருந்து வருகிறது. இது சம்பந்தமாக 28. 12. 2024. 30. 12. 2024 ஆகிய தேதிகளில் திண்டிவனத்தில் நகர மன்ற தலைவி நிர்மலா ரவிச்சந்திரன் அவர்களிடம் மேற்படி சாலைகளை பற்றி தகவல் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவர். திண்டிவனம் நகராட்சி ஆணையாளர் விரைந்து மேற்படி சாலைகளை சரி செய்து திண்டிவனம் நகர பொதுமக்களுக்கு வாகன ஒட்டிகளுக்கு ஒரு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும் படி முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *