கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஆறு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சஹிபுல் இஸ்லாம் 40, சோ ஹில் இஸ்லாம் 20, அபுல் உள்சாயின் 26, கைருல் இஸ்லாம் 26, அமினூர் ரஹ்மான் 19, ரோஷன் அலி 35 ஆகிய ஆறு பேர் சட்டவிரோதமாக பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சட்ட விரோதமாக வங்கதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பல்லடம் பகுதியில் கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.