சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் மணிமேகலை பிரசுரம் சார்பாக ஒரே நேரத்தில் 48 நூல்களை வெளியீடு செய்தனர். இந்நிகழ்வில் உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, அமைச்சர்கள் சேகர் பாபு, சிவசங்கர்,காஞ்சிபுரம் சஞ்சீவி ராஜா சுவாமிகள், திரைப்பட நடிகர் நடிகைகள் உட்பட பிரமுகர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.