மாறிவரும் சூழலில் இத் தலைமுறைக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பேச்சு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்,
கரிசல் இலக்கிய கழகம், விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து தேசிய 39 ஆவது புத்தக கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.
கரிசல் இலக்கியக் கழக செயலாளர் மருத்துவர் அறம் தலைமையில் ராஜபாளையம் ராம்கோ குழுமம் சார்பில் ராஜ்குமார் முன்னிலையில் முதுநிலை விற்பனை சீரமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் பேசும்போது கூறியதாவது:
இலக்கிய ரசனை உள்ளவர்கள் ராஜபாளையம் நகரில்தான் அதிகம் இங்கு இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த ஆர்வத்துடன், வந்து கலந்து கொள்வதை காணமுடிகிறது, பொதுவாகவே உணவு திருவிழா நடத்தினால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இங்கு அப்படி இல்லை.தற்போது மற்ற பகுதிகளில் எழுத்தாளர்கள் எண்ணிக்கையை விட பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது. முக்கியமான பேச்சாளர்கள் பேசும்போது கூட்டம் இல்லை என்றால் நன்றாக இருக்காது என்பதற்காக கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கூட்டத்தைக் கூட்டி பேச வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதிலும் அதிகமான பேச்சாக மேடைப் பேச்சை விட கல்லூரி மாணவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்வது அதிகமாக இருக்கும். அதையும் சமாளித்து தான் கூட்டத்தை நடத்த வேண்டும்.
புத்தகத்தில் உள்ள குறித்து அதிகமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மக்கள் விரும்பும் படி விரைவாகவே கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் கவனச் சிதறல்கள் தற்போது அதிகமாகிவிட்டது வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மாறிவரும் சூழலில் இத்தலைமுறைகளுக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் எந்த வகையிலாவது இது போன்ற திருவிழாக்களை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியே தீர வேண்டும் ராஜபாளையத்தில் சிறந்த அமைப்புகள் சமூக அமைப்புகள் இலக்கிய அமைப்புகள் சமூகம் சார்ந்த விழிப்புணர் அமைப்புகள் ஏராளம் உள்ளது எனவே இங்கு எந்த கூட்டம் நடந்தாலும் கூட்டம் அதிகமாகவே வந்துவிடும் பள்ளி மாணவ மாணவிகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு கவனச் சிதறல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க தனிமனித ஒழுக்கம் வேண்டும் எனவே தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை உருவாக்குவதற்கு அரசு முனைப்பு காட்டி வருகிறது ஆனால் இதில் பதிப்பாளர்கள் விற்பனையில், அதிகமாக வெற்றி பெறுவதில்லை இந்த மாவட்டத்தில் நன்றாக வெற்றி பெற்று வருகிறது அரசு புத்தகத் திருவிழாவிற்காக மானியமும் வழங்கி வருகிறது. புத்தகத் திருவிழா நடத்துவது வெற்றி பெறுவதற்காக மட்டும் அல்ல. சமூகத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்காகவே இது போன்ற புத்தகத் திருவிழா நடத்துவது என்பது மிக முக்கியமாகும்.- இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வீ. ப. ஜெயசீலன் பேசினார்.
புத்தகத் திருவிழாவில் முதல் விற்பனையை ஏ.கே. டி. தர்மராஜா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஏ.கே.டி. கிருஷ்ணராஜ் துவக்கி வைத்தார். முதல் விற்பனையை நவபாரத் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் முனைவர் நவபாரத் நாராயண ராஜா பெற்றுக்கொண்டார்.மேலும் விழாவில் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன், கவிஞர் கொ.மா. கோதண்டம், வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ் துறை தலைவர் ரவி, ராஜபாளையம் ஆங்கிலத்துறை முருகானந்தம், தமிழ் துறை தலைவர் கலாவதி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் கவிஞர் ரமணி, கவிஞர் நந்தன் கனகராஜ், பகிர்வு அறக்கட்டளை செல்வகுமார், சுதந்திர சிந்தனை முனைவர் கந்தசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். முடிவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கவிஞர் கண்மணி ராசா நன்றி கூறினார். ஏராளமான புத்தக ஆர்வலர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.