தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் திருவிழா மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது.
பாரம்பரியத்தைப் பேணும் விதமாக, மாணவ-மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு விழாவை மேலும் அழகுப்படுத்தினர்.
இந்த நிகழ்வு பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கல் பண்டிகையின் அடையாளமாக, மண் அடுப்பு, மண்பானை, கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவற்றுடன் பொங்கல் செய்து கொண்டாடப்பட்டது. விழாவை பாரத் கல்வி குழுமத்தின் செயலர் புனிதா கணேசன் சிறப்பாக துவக்கி வைத்தார்.
நிகழ்வின் சிறப்பம்சமாக கும்மி பாட்டு, சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கல்லூரியின் இயக்குநர் முனைவர். த.வீராசாமி. முதல்வர் முனைவர் க.குமார். முதல்வர் சி.முத்துக்கிருஷ்ணன், கல்லூரி உள்தர உறுதி பிரிவின் இயக்குநர் மா.சுகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் இரா.அறவாழி, துணை முதல்வர்கள் இராஜராஜேஸ்வரி, ப.கவிதா. பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவரும் இணைந்து கலந்துகொண்டு, தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பண்டிகைக்கு மெல்லிய சமத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை உணர்த்தினார்கள், கல்லூரி வளாகம் திருவிழா கொண்டாடியது.