ஜே சிவகுமார். திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் சாலை மறியல்.. திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சாலை மறியல் போராட்டம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் முன்பு நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் என் வசந்த் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்ட செயலாளர் கே எஸ் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் சாலை மறியலின் போது வளர்ச்சி துறையில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும் வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் பணியிடை இறந்த ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட பணி நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சாலை மறியல் நடைபெற்றது ஆர்ப்பாட்ட நிகழ்வில் டி என் ஆர் டி பி ஏ மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் மாநில தணிக்கையாளர் புஷ்பநாதன் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் மாவட்டத் துணைத் தலைவர்கள் அமர்நாத் பாண்டியன் இளங்கோவன் ராமமூர்த்தி மோகன் ஆறுமுகம் இணை செயலாளர்கள் சூரியமூர்த்தி சிவனேசன் வினோத் ராஜ் நடராஜன் ராஜாராமன் சூரியமூர்த்தி உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த கொரடாச்சேரி நன்னிலம் குடவாசல் வலங்கைமான் நீடாமங்கலம் மன்னார்குடி கோட்டூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதியைச் சார்ந்த வட்ட செயலாளர்கள் தலைவர்கள் பொருளாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து திருவாரூர் அருகே காட்டூரில் அமைந்துள்ள தனியார் திருமண தங்க வைக்கப்பட்டனர்