செங்குன்றம் செய்தியாளர்
மக்களுக்கு வானிலை தொடர்பான தகவலை அளித்து லட்சக்கணக்கான உயிர்களையும் அவர்களது உடமைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வரும் இந்திய வானிலை ஆய்வு துறையின் 150 ஆம் ஆண்டு விழா சென்னை கொளத்தூர் அவர்களின் பள்ளி வளாகத்தில் இன்று காலை விமர்சையாக நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை எவர்வின் பள்ளி குழுமத்துடன் சென்னை வானிலை மையம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகள் அணிவகுப்பு அலங்கார உடை, விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
நிகழ்ச்சி தொடக்கத்தின்போது இந்திய வானிலை ஆய்வுத் துறை பிரத்தியேகமாக உருவாக்கிய பாடலுக்கு ஏற்றபடி மாணவிகள் நடனம் ஆடினர். அழகிய வானவில், மழைத்துளிகள் என்ற வடிவமைப்பில் மாணவ மாணவிகள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வானிலையை கண்டறியும் உபகரணங்கள், குறிப்புகள் வெதர் ஸ்டேஷன் என்ற கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இறுதியாக 400 மாணவ மாணவிகள் வானிலை ஆய்வு துறை குறித்த டி-ஷர்ட் தொப்பி அணிந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர். இந்த விழாவில் சென்னை வானிலை மையத் தலைவர் எஸ். பாலச்சந்திரன் மற்றும் உயரதிகாரிகள், எவர்வின் பள்ளிக்குழும சி.இ.ஓ மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன், இயக்குனர்கள் வித்யா மற்றும் முரளி கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றனர்.