குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்ட துவக்க விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய வேல் தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரன், பேரூராட்சி பொறியாளர் பாஸ்கர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் செந்தில் மற்றும் ஒப்பந்தக்காரர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.