தி.உதயசூரியன் டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு வாடிப்பட்டி செய்தியாளர் செல் 8098791598.
சந்தனம் பால் சுவாமி சித்தர் சிவன் கோவில் மண்டலாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தைமேடு அருகே அமைந்துள்ள ஸ்ரீபால் சாமி சித்தர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது இதற்கான48 வது நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. 48ம் நாள் மண்டல பூஜைவிழாவில் சிவபெருமானுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் அர்ச்சனைகள் செய்யப்பட்டது
தொடர்ந்து 108 வலம்புரி சங்குகளில் சிறப்பு அபிஷேகம். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பின்னர் காசி, ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களைசிவபெருமானுக்கு ஊற்றப்பட்டு மண்டல அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாஏற்பாடுகளை சந்தானபால்சுவாமி சித்தர் கோவில் வகையறா பங்காளிகள் நிர்வாகிகள் செய்திருந்தனர்