மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி…!
செய்தியாளர்; பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார வள மையம் சார்பில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
அதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்.பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஞானசம்பந்தன் தொடங்கி வைத்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன், ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு ஆசிரியர் எல். லத்தீப் வரவேற்றார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம், பஜார் வீதி, தேரடி வழியாக வந்தடைந்தது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திருவேங்கட லட்சுமி, கமலக்கண்ணன், சிறப்பு ஆசிரியர்கள் எமல்டா , ரமேஷ், லத்திசா மேரி, இயன் முறை மருத்துவர் சத்யா , பகல் நேர பராமரிப்பு பணியாற்றினார் சல்சா உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.