புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி முழுவதும் பச்சரிசி,வெல்லம்,நெய்,முந்திரி ஏலக்காய் உடன் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு
தனது சொந்த செலவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி என்கிற பாஸ்கர் வழங்கினார்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர்என்கிற தக்ஷிணாமூர்த்தி பொது மக்களுக்கு பொங்கல் பரிசாக பொங்கல் தொகுப்பு பொருட்களை தனது சொந்த செலவில் ஆண்டுதோறும்
பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
அந்தவகையில் சட்டமன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி என்கிற பாஸ்கர் முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் பூஜைகள் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து பொங்கல் தொகுப்பு பொருட்களான பச்சரிசி வெள்ளம் மஞ்சள்,குங்குமம் முந்திரி திராட்சை ஏலக்காய் நெய் பச்சைபயிறு உப்பு உள்ளிட்ட பத்து வகை பொருட்களை தனது சொந்த செலவில் முருங்கப்பாக்கம்,சேத்திலால் நகர், கணபதி நகர், முருங்கப்பாக்கம்பேட் ஆகிய பகுதிகளிலும், ஆர் கே நகர், பாரதிநகர்,டோபி கானா, ராம்சிங் நகர், சண்முகம் நகர்,சோழபுரம், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் அப்பகுதிகளை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.