கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா….
இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேரூர் திமுக கழகச் செயலாளர் துளசிஅய்யா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முஸ்லிம் பரிம்பாலான ஜமாத் சபை தலைவர் முஹம்மது நஜீப், புனித தேவாலய அருட் சகோதரர் டென்னிஸ், வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் அஞ்சுமன் அறிவகம் நிறுவனர் ஹாஜி.ஜபருல்லாஹ், அரிமா சங்கம் மாவட்ட தலைவர் சுப்பராமன், பேரூராட்சி நிர்வாகிகள் கோவிந்தராமன் , அழகேசன் ,முபாரக்,
தஸ்லீமா பானு பக்கீர்மைதீன், மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி, நிம்மல் குமரன், ஹரிஹரன், மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்துக் கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.