தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டியை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பெத்தாங் போட்டி முருங்கப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கின்ற தட்சிணாமூர்த்தி மற்றும் முருங்கப்பாக்கம் திரௌபதி அம்மன் ஆலய முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன் ஆகியோர் பெத்தாங் விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் சுமார் 300 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்து விளையாடி வருகின்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு நிறைவு விழாவில் விருதுகளும் கோப்பைகளும் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
இன்று நடைபெற்ற மாநில அளவிலான பெத்தாங் துவக்க விழாவில் பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழக தலைவர் குமரேசன், கௌரவ தலைவர் கணபதி, செயலாளர் ஆனந்த், கேப்டன் ஏழுமலை, மற்றும் பெத்தாங் விளையாட்டு கழக நிர்வாகிகள் சின்னத்தம்பி, ராமு, பிரதீப், ஸ்ரீதரன், கோபி, பெரியசாமி, தமிழ், அன்பு, உள்ளிட்ட நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.