விருத்தாசலத்தில் காய்கறி விற்கும் டாட்டா ஏசி வண்டியில் புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்தவர்கள் கைது.
விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சந்துரு தலைமையிமையான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி முள்ளோடையிலிருந்து புதுச்சேரி மாநில மது பாட்டில்களை மர்ம நபர்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இரவு 12 மணி அளவில் அந்தப் பகுதியில் வந்த காய்கறி லோடு வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது காய்கறிகளுக்கு அடியில் சுமார் ரூபாய் 30,400 மதிப்பிலான 49 லிட்டர், 214 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரொக்க தொகை ரூபாய் 10,400 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து மினி வேன் உரிமையாளர் விருத்தாசலம் லூகாஸ் தெருவை சேர்ந்த பன்னீர் (58) மற்றும் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் த/பெ. வேலு (25)ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் குறித்து விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் சந்துரு, காந்தி தனிப்படை காவலர்கள் ராமு சரவணன், சிட்டிபாபு, ஜெயபால்,
உள்ளிட்ட விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்