கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா….
அனைத்து மதத்தினரும் பங்கேற்று கொண்டாடினர்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா பேரூர் திமுக கழகச் செயலாளர் கபிலன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக பேரூர் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் , மகளிரணியினர் என பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.